புகையிரதத்துடன் மோதிய முச்சக்கர வண்டி; வெளிநாட்டு பெண் உள்ளிட்ட 2 பேர் பலி

காலி மாவட்டம், பெலிஅத்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த 'ரஜரட்ட ரெஜின' கடுகதி புகையிரதம், தல்பே புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் வெளிநாட்டு பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மரணமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் இவ்வாறு மரணமடைந்த குறித்த பெண் ரஷ்ய நாட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் மரணமடைந்த மற்றையவர் முச்சக்கர வண்டியின் சாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

உணவட்டுன, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவெல்ல பிரதேசத்திலுள்ள மஹரம்ப புகையிரத கடவையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த கடவையிலுள்ள புகையிரத சமிக்ஞை விளக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லையெனவும்,  அது தொடர்பான அறிவிப்பு பலகையொன்று அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...