தமிழக மீனவர்களை விடுவிக்க தலையிடுமாறு கோரிக்கை

ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழக மீனவர்கள் 23 பேரை கடந்த 28ஆம் திகதி கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது 05 மீன்பிடிப் படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாண்டு மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தம்,மன வேதனைகளை ஏற்படுத்தியுள்னை. ஏற்கனவே நெருக்கடியான பொருளாதாரத்தை எதிர்கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது.

தமிழ்நாட்டின் 105 மீன்பிடிப் படகுகள் தற்போது இலங்கை வசமுள்ளன. தொடர் முயற்சிகளின் காரணமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இன்னும் இலங்கையின் கட்டுப்பாட்டிலே உள்ளன. எனவே,தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், தற்போது இலங்கையிலுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் தேவையான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக முதல்வரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...