ஏரியில் நீராடச் சென்ற 72 வயது நபர் மூழ்கி மரணம்

- மன்னார், உப்புக்குளத்தில் சம்பவம்

மன்னார், உப்புக்குளம்த்தைச் சேர்ந்த 72 வயது நபர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

நேற்று (28) பிற்பகல் வேளையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஏரியில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார், உப்புக்குளத்தை சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மன்னார், உப்புக்குளம் பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதுடன் இவருக்கு நெருங்கிய உறவினர் எவரும் இல்லை என தெரியவந்துள்ளது.

சடலம் மன்னார் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...