பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் வட மாகாணத்திற்கு விஜயம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் பர்கி அவர்கள் இலங்கையின் வட மாகாணத்திற்கான தனது விஜயத்தின் போது மன்னாரில் பதினைந்து பொது  குடிநீர் கிணறுகளை திறந்து வைத்தார்.

இந்த குடிநீர் கிணறு திட்டமானது, முதன்முதலில் பாகிஸ்தான் அரசின் சார்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் சுமார் 40 கிமீ பரப்பளவை உள்ளடக்கியது.

இதன் மூலம் சிறுவர்  பாடசாலை,  பள்ளிவாசல் உட்பட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர். மேலும், மன்னாரில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு கணினிகளை உயர் ஸ்தானிகர் வழங்கி வைத்ததோடு தகுதியான பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.

உயர் ஸ்தானிகர், யாழ்ப்பாண மேயர் மற்றும் யாழ்ப்பாண  பள்ளிவாசல் இமாம் ஆகியோரை நேரில் சந்தித்ததோடு பரஸ்பர இருதரப்பு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கிளிநொச்சி கட்டளைத் தளபதி மற்றும் 54 ஆவது இராணுவத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியையும் உயர் ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ சிவில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான விடயங்கள் இதன்  போது கலந்துரையாடப்பட்டன.

மேலும், அனுராதபுரத்தில் மிக வணக்கத்திற்குரிய பெளத்த பிக்குகளையும் சந்தித்தார்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயமானது, பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக எப்போதும் அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டும்


Add new comment

Or log in with...