லித்தியம் உற்பத்திக்கான அமைப்பை நிறுவ திட்டம்

தென்னமெரிக்க நாடுகளான பொலிவியா, சிலி ஆகியவற்றுடன் இணைந்து பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளுக்கான அமைப்பை போன்றதொரு ஸ்தாபனத்தை உருவாக்கி, லித்தியத்தின் உற்பத்தி மற்றும் விலையை நிர்ணயம் செய்ய ஆர்ஜென்டீனா திட்டமிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் லித்தியத்துக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையிலேயே இந்நாடுகள் இவ்வாறான நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அமெரிக்க பூகற்பவியல் ஆய்வின் படி, இம்மூன்று நாடுகளிலும் லித்திய வளங்கள் அதிகளவில் உள்ளன.

ஆர்ஜென்டீனா லித்தியத்தை நேரடியாகப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு பொலிவியா, சிலி ஆகிய நாடுகளுடன் இணைந்து அதன் உலகளாவிய விநியோகஸ்தராக உருவாக திட்டமிட்டுள்ளது.


Add new comment

Or log in with...