டார்வின் ஆவணம் ஏலம்

தனது பரிணாமக் கோட்பாட்டை நியாயப்படுத்தி சார்ல்ஸ் டார்வின் கையொப்பம் இட்ட காகிதம் ஒன்று நியுயோர்க்கில் உள்ள செளதபியில் ஏலம் விடப்படவுள்ளது.

இந்த காகிதம் டார்வினின் கைப்பட எழுதிய பொருட்களில், சாதனை விலைக்கு வாங்க பலரும் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 800,000 டொலர்கள் வரை விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1965இல் பிரபல சஞ்சிகை ஒன்றில் பிரதி எடுக்க முடியுமான ஒரு ஆவணத்தையே அவர் சமர்ப்பித்துள்ளார்.

டார்வின் தனது ஆவணங்களை காப்பகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை, அதனால் சிறிய அசல் பொருட்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன.

டார்வின் தனது பெயரை சி. டார்வி அல்லது சி.எச் டார்வின் என்றே எழுதும் நிலையில் இந்த ஆவணத்தில் சார்ல்ஸ் டார்வின் என்று முழுப் பெயரையும் எழுதி இருப்பது மிக அரிதானதாக உள்ளது.


Add new comment

Or log in with...