பண்டாரகமவில் காலடி பதித்த மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ்

இலங்கையின் முன்னணி உரிமம் பெற்ற நிதி நிறுவனமான மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் லிமிட்டெட், களுத்துறை மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மற்றும் வணிக மையமான பண்டாரகமவில் தனது புதிய கிளையை அண்மையில் திறந்து வைத்துள்ளது. 26, களுத்துறை வீதி, பண்டாரகம என்ற முகவரியில் அமைந்துள்ள புதிய கிளையானது, மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸ் வழங்கும் முழு அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வசதியான, நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் நவீன இடத்தில் வழங்குகிறது.

பண்டாரகம என்பது கம்பனியின் வளர்ந்து வரும் கிளை வலையமைப்பில் 23 ஆவது சேர்க்கையாகும். இது மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸின் விரைவான வலையமைப்பு விரிவாக்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கடன்கள், நிலையான வைப்புக்கள், குத்தகை மற்றும் பலவற்றை வழங்குவதற்காக, தனது பிரசன்னத்தை இன்னும் கூடுதலாக அதிகரிக்கவும், விரிவுபடுத்தவும் முயல்கிறது.

மஹிந்ரா ஐடியல் ஃபினான்ஸின் புதிய பண்டாரகம கிளையின் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், இந்நிகழ்வில் நிறுவனத்தின் வர்த்தக மற்றும் பிராந்திய முகாமைத்துவ அணிகளின் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.


Add new comment

Or log in with...