சீனாவில் 24 மணி நேரத்தில் 31,000 இற்கும் அதிக கொவிட் தொற்றாளர்

சீனாவில் கொவிட் நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 31,000க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட உச்சத்தை அது தாண்டியது. கட்டுப்பாட்டு நடைமுறைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

ஏற்கனவே சில நகரங்கள் அத்தகைய நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. செங்சோவ் நகரில் நேற்று நள்ளிரவிலிருந்து முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்ஹாயில் புதிதாக நுழைவோருக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பீஜிங்கில் வீட்டிலேயே இருக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் பாடசாலைகள் மூடக்கப்பட்டுள்ளன. சீனா கொவிட் தொற்றை முழுமையாக துடைத்தொழிக்கும் கொள்கையை பின்பற்றுவதோடு அதில் சற்று தளர்வை ஏற்படுத்திய நிலையிலேயே அங்கு நோய்த் தொற்று அதிகாரித்துள்ளது.

சீனாவில் நோய் தொற்று தற்போது அதிகரித்து வருகின்றபோதும் அது பல வளர்ந்த பொருளாதாரங்களில் நோய் உச்சம் பெற்றிருந்த போது இருந்த எண்ணிக்கையை விட குறைவாகும்.


Add new comment

Or log in with...