சட்டபூர்வ பாதுகாவலரால் 13 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்

- சிறுமியுடன் தலைமறைவான சந்தேகநபரைக கண்டுபிடிக்க உதவவும்

சட்டபூர்வ பாதுகாவலரால் 13 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபர் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு, பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அம்பாறை, இங்கினியாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலஹித பிரதேசத்தில் வசிக்கும் தனது 13 வயது மகள் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி சட்டபூர்வ பாதுகாவலரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக, இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் தாயாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இக்குற்றம் தொடர்பில் இங்கினியாகல பொலிஸார் அம்பாறை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் அச்சிறுமியுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், இவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபரின் விபரம் பின்வருமாறு

  • பெயர்: சுமித் குணவர்தன
  • வயது: 47
  • அடையாள அட்டை இல: 752496657 V
  • முகவரி : தம்பகல்ல

சந்தேகநபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரியுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு, பொதுமக்களிடம் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிலைய பொறுப்பதிகாரி இங்கினியாகல : 071 8591150
இங்கினியாகல பொலிஸ் நிலையம் :- 063 2242022


Add new comment

Or log in with...