ஒன்றரை வயதுக் குழந்தை 3ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

- சம்பவம் தொடர்பில் தாய்மாமன் கைது

கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது மாடியில் இருந்து வயதான ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் தாயின் சகோதரரை (தாய்மாமன்) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...