30 ஆண்டு கருவைக் கொண்டு இரட்டை குழந்தை பிரசவம்

30 ஆண்டுகளுக்கு உறைய வைக்கப்பட்ட கருவழி பிறந்த இரட்டையர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இரட்டையர்கள் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி பிறந்தனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் டென்னஸ்ஸி மாநிலத்தில் நடந்தது. மிக நீண்ட காலமாக உறைய வைக்கப்பட்ட கருவிலிருந்து பிறந்த குழந்தைகள் என இந்த இரட்டையர் சாதனை புரிந்துள்ளனர்.

பெற்றோர் ரேச்சல் ரிஜ்வேயும், பிலிப் ரிஜ்வேயும் அதனை நம்ப முடியாமல் வாயடைத்துப் போயினர்.

1992ஆம் ஆண்டில் செயற்கைக் கருத்தரிப்பு வழி உருவான கருக்கள் உண்மையில் இன்னொரு தம்பதிக்குச் சொந்தமானவை. அவை 2007ஆம் ஆண்டு வரை சேமிப்பில் வைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் அவை கருக்களைத் தானமாகப் பெறும் நிலையத்திற்குக் கொடுக்கப்பட்டன. ரிஜ்வே தம்பதி அந்தத் தானம் வழி பயனடைந்தனர். முன்னதாக சுமார் 27 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கரு ஒன்றில் இருந்து 2020 ஆம் ஆண்டு பிறந்த மொல்லி கிப்சன் என்ற குழந்தையே சாதனை படைத்திருந்தது.


Add new comment

Or log in with...