அமெரிக்க – இந்திய போர் ஒத்திகை ஆரம்பம்

18ஆவது இந்தியா மற்றும் அமெரிக்க கூட்டு இராணுவ ஒத்திகையான 'யுத் அப்யஸ் 22' உத்தர்காண்டில் ஆரம்பமாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த வருடாந்த இராணுவ ஒத்திகையில் இரு இராணுவங்களினதும் சிறந்த பயிற்சிகள், மூலோபாயங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் பகிரப்படவுள்ளன.

இந்த இராணுவ ஒத்திகை வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 11ஆவது வான்வழிப் பிரிவின் 2ஆவது படையணியைச் சேர்ந்த வீரர்களும் இந்திய இராணுவத்தின் அசாம் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களும் இந்த இராணுவ ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர்.


Add new comment

Or log in with...