உலக சம்பியனாகும் அணிக்கு 'பியர்' பரிசு

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கட்டார் அரங்குகளில் விற்க முடியாத மது கலந்த பியர்களை வெற்றியீட்டும் அணிக்கு வழங்கப்போவதாக பீயர் உற்பத்தி நிறுவனமான பட்வைசர் அறிவித்துள்ளது.

கால்பந்து அரங்குகளில் மதுபானம் விற்பதற்கு கடைசி நேரத்திலேயே கட்டார் தடை விதித்தது. இதனால் பட்வைசர் நிறுவனத்தின் பியர் போத்தல்கள் களஞ்சியங்களில் சிக்கிக்கொண்டன.

பட்வைசர் நிறுவனம் பிஃபாவின் அனுசரணையாளராகவும் உள்ளது. அந்த நிறுவனம் களஞ்சியம் ஒன்றில் மதுபான போத்தல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படம் ஒன்றை வெளியிட்டு உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு அவை பரிசாக வழங்கப்படும் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...