வோட்டர்போலோ போட்டியில் விமானப்படை அணி சம்பியன்

இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியம் ஏற்பாடு செய்த 2022ஆம் ஆண்டுக்கான வோட்டர்போலோ போட்டியில் தொடர்ந்து 11ஆவது ஆண்டாக இலங்கை விமானப்படை ஆடவர் பிரிவு அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

சுகததாச நீச்சல் தடாகத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தோமஸ் பழைய மாணவர் நீச்சல் கழகத்துக்கு எதிராக களமிறங்கிய இலங்கை விமானப்படை அணியினர் இலகுவாக வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றினர். இந்த நிகழ்வில் நீர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் நேத்ரு நாணயக்கார மற்றும் இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியம் தலைவர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர ஆகியோர் பங்கேற்றனர்.


Add new comment

Or log in with...