இலங்கையிலிருந்து மேலும் 10 பேர் இராமேஸ்வரத்துக்கு இதுவரை 198 பேர் சட்டவிரோதமாக சென்றுள்ளனர்

இலங்கையிலிருந்து 10 தமிழர்கள் நேற்று (23) காலை தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்துள்ளனர். இதுவரை, கடந்த மார்ச் முதல் இலங்கையிலிருந்து 198 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.  

இந்நிலையில், வவுனியா மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்த உதயசூரியன், அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள், வவுனியா மாவட்டம் பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி, அவரது மூன்று குழந்தைகளென இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மன்னாரிலிருந்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடிக்கருகே முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்தனர்.

தகவலறிந்த இராமேஸ்வரம் கரையோர பொலிஸார், இவர்களை மீட்டு, மண்டபம் கரையோர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு இந்த பத்துப்பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...