தொழிலதிபர் நாஜிம் விருது வழங்கி கௌரவிப்பு

மடவளை பஸாரை சேர்ந்த பிரபல சமூக சேவையாளரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் ஏ.டபிள்யூ.எம். நாஜிம் அகில இலங்கை சமூக கலாசார சுற்றுப்புறசூழல் அமைப்பினால் 'ஹித்தவாதி கீர்த்தி ஸ்ரீ தேசமான்ய’ என விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அகில இலங்கை ரீதியாக பல்துறை சார்ந்த பணிகளில் ஆளுமை மிக்க முன்னோடிபணியாளர்களுக்கு வடக்கு கிழக்கு அடங்கலாக நாடு முழுவதிலிருந்தும் மேற்படி விருதுக்கு 20 நபர்கள்தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நபருக்குள் ஒருவரான இவர், மடவளை ஜும்ஆமஸ்ஜித், வர்த்தக சங்கம் போன்ற பல்வேறு சமூக நல அமைப்புகளில் தலைமைத்துவம் வகித்துவருவதுடன் தேசிய மட்டத்தில் இயங்குகின்ற பல்வேறு அமைப்புகளின் பிரதியாகவும் இணைந்து செயலாற்றி வருகிறார்.

மேற்படி விருது வழங்கும் வைபவம் அகில இலங்கை சமூக கலாச்சார சுற்றுப்புறசூழல்  அமைப்பின் தலைவர் திரு. ரஞ்சன் விஜயரத்ன தலைமையில் கொழும்புபண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20)நடைபெற்றது.மேலும் நைட் பதவி பெற்ற கலாநிதி, தேசமானி ஏசியா பசிபிக் நைட்கொமாண்டர் சேர். க்லெரல்ஸ் குமாரகே பிரதம அதிதி யாகவும் மற்றும் பல்துறை சார்ந்தமுக்கியஸ்தர்கள் பலரும்  அதிதிகளாக கலந்துகொண்டனர்


Add new comment

Or log in with...