பெரும்பான்மை பலமிருந்தால் பாராளுமன்றை கலைக்க எதிரணி பிரேரணையை கொண்டுவரலாம்

பெரும்பான்மை பலம் இருக்குமானால் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணையை கொண்டு வர முடியுமென, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அரசியலமைப்பிற்கிணங்க134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பதவியிலுள்ள ஜனாதிபதிக்கு, மக்கள் ஆணை கிடையாதென்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின், பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையை அவர்கள் தாராளமாகக் கொண்டு வரமுடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அரசாங்கமானது எந்த நிலையிலும் பாராளுமன்ற ஐனநாயகத்திற்கு மதிப்பளித்தே செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...