பட்ஜட்டுக்கு ஆதரவளித்த துமிந்தவுக்கு எதிராக கட்சி நடவடிக்கை

வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானம் தமக்கும் பொருந்துமென்றும்,மத்திய குழுவில் தானும் பங்குபற்றியதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் கட்சியின் ஆட்சியை பிடிப்பாரா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பில் அச்சப்படவில்லை, எவரும் கட்சியில் இணையலாம் என்றார்.


Add new comment

Or log in with...