'குழந்தைகளைக் கொண்டாடுவோம்' திருச்சியில் விருது வழங்கும் விழா

நந்தவனம் பவுண்டேசன், இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணை யம், திருச்சி வாசவி கிளப், எலைட் கப்புல்ஸ் இணைந்து நடத்திய 'குழந்தைகளைக் கொண்டாடுவோம்' சிறார் இலக்கிய விருது மற்றும் சாதனை மாணவர் விருது வழங்கும் விழா கடந்த 20.11.2022 அன்று திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் ப.நரசிம்மன் தலைமையில் நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பாலசாகித்திய புரஸ்கர் விருதாளர் மு.முருகேஷ், மலேசியா செந்நூல் முத்தமிழ்ப் படிப்பகத் தலைவர் பெ.இராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கினர்

நிகழ்வில் மு.முருகேஷ் தனது சிறப்புரையில் 'நவீன கருவிகளின் வரவால் தற்போது குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே அரிதாக உள்ளது. பெற்றோர் குழந்தைகளின் பேச்சைக் காதுகொடுத்து கேட்க வேண்டும். குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். அப்போதுதான் குழந்தை உணர்வு நமக்கும் ஏற்படும்.

அதனால் பெரிய பிரச்சினைகளும் சாதாரணமாகத் தெரியும். படிப்பு மட்டுமே வளர்ச்சிக்கான அறிகுறியல்ல. அதையும் தாண்டி உலகில் பல்வேறு விஷயங்கள் உள்ளன.அவற்றைத் தெரிந்துகொள்ள குழந்தை உள்ளம் வேண்டும்" என்றார்

இவ்விழாவில் புதுச்சேரி பாரதி வாணர் சிவா, சிங்கப்பூர் டி.என். இமாஜான், அமீரகம் துரை ஆனந்த்குமார், ஈரோடு உமையவன், வந்தவாசி ஜு.மைத்ரேயி, சேலம் சே.மதுரம் ராஜ்குமார், திருச்சி தீப் ஷிகா, ஆசியோருக்கு சிறார் இலக்கிய விருதுகளும், மலேசியா யோகன் சுகுமாரன், திருச்சி, ஸ்ருதிகா தீப்தி, சஞ்சீவ் ஜெயப்பிரகாஷ், ரமாதேவி, ஜெயுதீஷ், தன்யா சக்தி, ஹர்சினி, தர்ஷினி ஆகியோருக்கு சாதனை மாணவர் விருதுகளும் வழங்கப்பட்டன.

முன்னதாக உரத்த சிந்தனை திருச்சிக் கிளைத்தலைவர் பா.சேதுமாதவன் அனைவரையும் வரவேற்க, நந்தவனம் பவுண்டேசன் பொருளாளர் பா.தென்றல் நிகழ்வை தொகுத்து வழங்க, மருத்துவ கலாநிதி வே.த.யோகநாதன் நன்றி கூறினார்.


Add new comment

Or log in with...