ஆப்கான் விடயத்தில் இந்தியா அக்கறை

ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தாலும் அந்நாட்டு மக்களுடனான வரலாற்று நட்பு மற்றும் சிறப்பு உறவுகள் மூலம் ஆப்கான் மீதான இந்தியாவின் அணுகுமுறை வழிநடத்தப்படும் என்று ஐ.நாவுக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஆர். ரவீந்திரா வலியுறுத்தினார்.

ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆப்கானில் உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவது, ஆப்கானின் உண்மையான பிரதிநிதித்துவ அரசு ஒன்றை உருவாக்குவது, பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடு, போதைக் கடத்தல் மற்றும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுபான்மையினர் உறவை பாதுகாப்பதற்கே இந்தியா முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...