சவூதியில் மரணமடைந்த இலங்கையரின் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு

சவூதி - தமாம் பகுதியில் மரணமடைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரின் உடல் நேற்று (11) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த தம்பி ஐயா தவராசா எனும் 64 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் இருபது வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையிலே இவர் 20 நாட்களுக்கு முன்னர் சவூதி - தமாம் பகுதியில்  மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த நபரின் உடல் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவை அமைப்பின் வாகன சேவை ஊடாக குடும்பதாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம். பர்ஸான்


Add new comment

Or log in with...