VAT வரித் திருத்தச் சட்டமூலம் முழுமையாக அரசியலமைப்பை மீறவில்லை

- குழு நிலையில் திருத்தங்கள் மேற்கொள்வதால் சிக்கல் இல்லை: உயர் நீதிமன்றம்
- சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றிற்கு அறிவிப்பு

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் முற்று முழுமையாக அரசியலமைப்புக்கு முரணானதாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்றையதினம் (10) பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு பிரதி சொலிசிட்டர் நாயகத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தின் குழுநிலையில் சேர்க்கப்படவுள்ளதால், சட்டமூலம் முழுவதுமாக விதிகளுக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

எனவே அதில் அரசியலமைப்பு தொடர்பில் அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி சபைக்கு அறிவிக்கும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.

பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலமானது, அரசியலமைப்பின் 121(1) பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்கது.

இதில் உள்ளடக்கப்படவுள்ள திருத்தங்கள் வருமாறு:

(i)Clause 3
The insertion of the following proviso in Section 10(1)—
“Provided further, for the purposes of paragraph (vii), the requirement for the registration shall raise from the date on which this Amendment Act comes into operation.”

(ii)Clause 4(1)
The reference to “September 30, 2022” to be deleted and substituted with “November 30, 2022”.

(iii)Clause 4(2)
The reference to “October 1, 2022” to be deleted and substituted with “December 1, 2022”.
I order that the Determination of the Supreme Court be printed in the Official Report of today’s proceedings of the House.


Add new comment

Or log in with...