வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் 5 இலிருந்து 10 லீற்றராக அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் உள்ள வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான தேசிய எரிபொருள் அட்டை நடைமுறைக்கு அமைய, வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு இன்று (06) இரவு முதல் 5 லீற்றரில் இருந்து 10 லீற்றராக அதிகரிக்கப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை விடுத்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

பொலிஸ் திணைக்களத்தில் மற்றும் மாகாண போக்குவரத்து அதிகாரசபையில் ஒன்லைனில் பதிவு செய்த முழுநேர வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரம் இது செல்லுபடியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...