தபால் பரிமாற்றகத்தில் ரூ. 5 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்

கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்தில் சுமார் ரூ. 50 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பொதியொன்றை சுங்க திணைக்களம் மீட்டுள்ளது.

ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட அட்டைப் பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த 2 கி.கி. இற்கும் அதிகமான நிறை கொண்ட 4,956 Methamphetamine மாத்திரைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் இருந்து அங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு தனிப்பட்ட பொருட்கள் என அறிவித்து குறித்த போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...