T20WC; SLvAFG - Super-12: இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

- குழு நிலையில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியது

2022 ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் சுப்பர் 12 சுற்றின் மற்றுமொரு போட்டியான இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 28 (24) ஓட்டங்களையும், உஸ்மான் கானி 27 (27)  ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் வணிந்து ஹசரங்க 3/13 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 2/30 விக்கெட்டுகளையும் கைப்பறினர்.

அதற்கமைய, 145 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களை பெற்று வெற்றி ஈட்டியது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 66 (42) ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 25  (27) ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 18 (14) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஷீட் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதற்கமைய, இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் போட்டியை வென்றுள்ளது.

ஆட்டநாயகனாக வணிந்து ஹசரங்க தெரிவானார்.

அதற்கமைய, குழு 1 இல் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 2 போட்டிகளில் தோல்வியையும் 2 போட்டிகளில் வெற்றியையும் பதிவு செய்து 4 புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்தில் தற்போது உள்ளது.

சுப்பர் 12 சுற்றில் குழு நிலையில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Afghanistan  (20 ovs maximum)
BATTING   R B M 4s 6s SR
Rahmanullah Gurbaz † b Kumara 28 24 33 2 2 116.66
Usman Ghani  c Shanaka b PWH de Silva 27 27 54 2 1 100.00
Ibrahim Zadran  c Rajapaksa b Kumara 22 18 35 1 1 122.22
Najibullah Zadran  c PWH de Silva b DM de Silva 18 16 29 1 0 112.50
Gulbadin Naib  run out (Nissanka/†Mendis) 12 14 25 0 0 85.71
Mohammad Nabi (c) c Shanaka b Rajitha 13 8 15 1 0 162.50
Rashid Khan  b PWH de Silva 9 8 10 1 0 112.50
Azmatullah Omarzai  not out 3 4 3 0 0 75.00
Mujeeb Ur Rahman  st †Mendis b PWH de Silva 1 2 1 0 0 50.00
Extras (b 3, lb 1, nb 1, w 6) 11  
TOTAL 20 Ov (RR: 7.20) 144/8
 
Fall of wickets: 1-42 (Rahmanullah Gurbaz, 6.1 ov), 2-68 (Usman Ghani, 10.2 ov), 3-90 (Ibrahim Zadran, 12.2 ov), 4-113 (Najibullah Zadran, 15.6 ov), 5-127 (Gulbadin Naib, 17.2 ov), 6-140 (Mohammad Nabi, 18.5 ov), 7-142 (Rashid Khan, 19.3 ov), 8-144 (Mujeeb Ur Rahman, 19.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Kasun Rajitha 4 0 31 1 7.75 11 2 1 1 1
Pramod Madushan 3 0 24 0 8.00 7 2 1 0 0
Lahiru Kumara 4 0 30 2 7.50 12 2 1 4 0
Maheesh Theekshana 4 0 33 0 8.25 5 1 1 1 0
Wanindu Hasaranga de Silva 4 0 13 3 3.25 12 0 0 0 0
Dhananjaya de Silva 1 0 9 1 9.00 1 1 0 0 0
Sri Lanka  (T: 145 runs from 20 ovs)
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  b Mujeeb Ur Rahman 10 10 10 2 0 100.00
Kusal Mendis † c †Rahmanullah Gurbaz b Rashid Khan 25 27 33 2 1 92.59
Dhananjaya de Silva  not out 66 42 78 6 2 157.14
Charith Asalanka  c Azmatullah Omarzai b Rashid Khan 19 18 27 1 0 105.55
Bhanuka Rajapaksa  c †Rahmanullah Gurbaz b Mujeeb Ur Rahman 18 14 24 3 0 128.57
Dasun Shanaka (c) not out 0 0 4 0 0 -
Extras (lb 1, w 9) 10  
TOTAL 18.3 Ov (RR: 8.00) 148/4
 
Fall of wickets: 1-12 (Pathum Nissanka, 1.6 ov), 2-46 (Kusal Mendis, 7.5 ov), 3-100 (Charith Asalanka, 13.3 ov), 4-142 (Bhanuka Rajapaksa, 17.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Fazalhaq Farooqi 3.3 1 22 0 6.28 11 3 0 1 0
Mujeeb Ur Rahman 4 0 24 2 6.00 12 3 0 0 0
Fareed Ahmad 2 0 25 0 12.50 3 3 1 1 0
Rashid Khan 4 0 31 2 7.75 10 2 1 1 0
Azmatullah Omarzai 2 0 17 0 8.50 2 1 0 1 0
Mohammad Nabi 2 0 16 0 8.00 2 0 1 0 0
Gulbadin Naib 1 0 12 0 12.00 1 2 0 0 0

 


Add new comment

Or log in with...