மக்கள் வாழ்வு சிறக்கட்டும்!

தீமையகன்று

தூய்மை கொண்ட

தீபத்திருநாளே!

இருளகன்று நல்லொளி

திக்கெட்டும் வீசட்டும்,

ெங்கதிரோன் ஒளிவெள்ளம் போல

மானுடர் உள்ளங்களில்

இன்ப வெள்ளம் பொங்கட்டும்!

இல்லங்களில் தீபச்சுடர்வரிசை சீரோங்க,

ஆன்மா லயக்கும் ஆலயங்களில்

ஆன்ம கோடிகள் இன்புற்று வழிபட,

தேன் தமிழான தீந்தமிழின்

வாழ்த்தொலி முழங்கட்டும்!

ஒளி தினமதில் உவகை கொள்ள

மானிடர் இடர் களைய சுடர் கொண்டு

மேவும் அகஜோதியில் படர்மலராய்

முல்லை வனம்போல் எல்லையிலா

செழிப்புடன் சீர்நிறையட்டும்!

மண்ணகமதில் புன்னகை தவழ,

விண்ணகமதில் தேவரும் மூவரும்

பூமாரி பொழிய, புவிமாந்தர் புத்தொளி

காண சுடர்மிகு நந்நாளில் சுகபோகம்

தளைத்திட ஈடிலா இலங்கையில்

தழிழர் வாழ்வு சிறக்கட்டும்!

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்....!

 

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்

கம்பளை


Add new comment

Or log in with...