நவம்பர் 01 முதல் தேசிய அடையாள அட்டை கட்டணங்கள் 2 மடங்காக அதிகரிப்பு

- புதிய அட்டையை பெற ரூ. 200; திருத்தம் மேற்கொள்ள ரூ. 500; தொலைந்த பிரதிக்கு ரூ. 1,000

நவம்பர் 01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொதுமககள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விடுத்துள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நவம்பர் 01 முதல்

  • புதிய தேசிய அடையாள அட்டையை பெற/ புதுப்பிக்க ரூ. 200
  • திருத்தம் மேற்கொள்ள ரூ. 500
  • (தொலைந்தமைக்காக) இணை பிரதியை பெற ரூ. 1,000

கட்டணங்கள் அறவிடப்படவுள்ளன.

தற்போதுள்ள கட்டணங்கள்

  • புதிய தேசிய அடையாள அட்டையை பெற ரூ. 100
  • திருத்தம் மேற்கொள்ள ரூ. 250
  • (தொலைந்தமைக்காக) இணை பிரதியை பெற ரூ. 500

PDF icon தே.அ.அ. கட்டண திருத்த வர்த்தமானி.pdf (78.19 KB)

PDF File: 

Add new comment

Or log in with...