Laugfs சிலிண்டர் விலைகள் ரூ. 500, ரூ. 200 இனால் குறைப்பு

லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய Laugfs சிலிண்டர் வகைகளின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 12.5kg: ரூ. 5,800 இலிருந்து ரூ. 5,300 ஆக ரூ. 500 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. 2,320 இலிருந்து ரூ. 2,120 ஆக ரூ. 200 இனால் குறைப்பு

கடந்த ஓகஸ்ட் மாதம் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 12.5kg: ரூ. 6,850 இலிருந்து ரூ. 5,800 ஆக ரூ. 1,050 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. 2,740 இலிருந்து ரூ. 2,320 ஆக ரூ. 420 இனால் குறைப்பு

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 4,551 இலிருந்து ரூ. 4,280 ஆக ரூ. 271 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. ரூ. 1,827 இலிருந்து ரூ. 1,720 ஆக ரூ. 107 இனால் குறைப்பு
  • 2.3kg: ரூ. 848 இலிருந்து ரூ. 800 ஆக ரூ. 48 இனால் குறைப்பு

Add new comment

Or log in with...