பஸ் நடத்துநர் பலி இருவருக்கு காயம் பத்தனை பகுதியில் சம்பவம்!

 

உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படு காயமடைந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் பி. ஜகத் ஜெயானந்த பண்டார (48)

என்பவராவார்.இவர், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹற்றன் டிப்போவில் நடத்துநராக கடமையாற்றும், இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹற்றனிலிருந்து மெதகம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக மணல் மற்றும் கூரைத் தகடுகளை ஏற்றிச் சென்ற லொறி,கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நேர்ந்ததாக

பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த நடத்துநர் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக லொறியின் பின்பகுதியில் பயணித்துள்ளார்.லொறி பின்நோக்கி சென்று குடைசாயும் வேளை இவரின் மீது கூரைத் தகடுகள் வீழ்ந்ததில் உயிரிழப்பு ஏற்பட்டது.

சடலம், சட்ட வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொட்டகலை – திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் (05) இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்து, ஒருவர்

 

(ஹற்றன் சுழற்சி நிருபர் கிஷாந்தன்)


Add new comment

Or log in with...