பாதுகாப்புச் சபை: நிரந்தர அங்கம் வகிக்க இந்தியா, பிரேசில் முயற்சி

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவத்திற்கான வேட்பு மனுவைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயற்படுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளன.

இதனடிப்படையில் இவ்வேட்பு மனுவுக்காக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் வலுவாக ஆதரிப்பது குறித்து கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவுக்கான பிரேசில் நாட்டுத் தூதர் டோ லாகோ தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவத்தை ஐந்து நாடுகள் கொண்டுள்ளன. அவற்றில் நான்கு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


Add new comment

Or log in with...