மேற்குலகின் கடந்த காலம் குறித்து புட்டின் குற்றச்சாட்டு

“உண்மை, சுதந்திரம் மற்றும் நீதிப் பெறுமானங்களுக்கு எதிராக மேற்குலகம் இந்தியா போன்ற நாடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதாக” ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

கிரம்லினின் செயின்ட் ஜோர்ஜ் மண்டபத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும்போது புட்டின் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். “மத்திய காலத்தில் மேற்குலகம் தனது காலனித்துவ கொள்கையை ஆரம்பித்து அமெரிக்காவில் செவ்விந்தியர்களை இனப்படுகொலை செய்து, அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டு, இந்தியா, ஆபிரிக்காவில் கொள்ளையில் ஈடுபட்டதோடு சீனாவுக்கு எதிரான இங்கிலாந்து மற்றும் பிரான்ஸின் போர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் போதைப்பொருளுக்கு ஆட்படுத்தி ஒட்டுமொத்த இனக் குழுக்களையும் அழித்தது” என்று புட்டின் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...