எரிபொருள் விநியோகம் நேற்று முதல் வழமைக்கு

நேற்று (05) முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரகுப் பணம் தொடர்பான சிக்கலுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சரினால் நேற்று முன்தினம் (04)

தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன குறிப்பிட்டார்.

அதற்கமைய, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் நேற்று முதல் உரியவாறு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் கூறினார்.

இதனிடையே, கொழும்பு உள்ளிட்ட சன நெரிசல் மிக்க பல பகுதிகளிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என (04) அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...