சுவீடனின் பாபோவுக்கு மருத்துவத்திற்கு நோபல்

மனித பரிணாம வளர்ச்சி குறித்த தனது ஆய்வுக்காக சுவீடனின் உடற்கூறியல் நிபுணர் ஸ்வன்டே பாபோவுக்கு 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

'அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக' அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இருந்து இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் பெருவோரின் விபரங்கள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பௌதீகவியலுக்கான நோபல் பரிசு இன்று (04) அறிவிக்கப்படவிருப்பதோடு தொடர்ந்து இராசாயனவியலுக்கான நோபல் பரிசு நாளை (05) அறிவிக்கப்படும்.


Add new comment

Or log in with...