ஹெம்மாதகம பிரதேச சிங்கள, தமிழ்மொழிமூல பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

சர்வதேச ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 6ஆம் திகதி மாவனல்லை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹெம்மாதகம பிரதேச சிங்கள, தமிழ் மொழிமூல பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இப்பிரதேசத்தில் உள்ள ஆறு சிங்களப் பாடசாலைகள் மற்றும் ஏழு முஸ்லிம் பாடசாலைகளையும் சேர்ந்த ஆசிரியர்களை ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி அவர்களை கௌரவித்து நினைவுச்சின்னங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

PMV அதிபர் NAGARAGIRI, N S அதிபர், மடுள்போவ மு. ம. வி அதிபர் ஆகியோரின் சிந்தனையில் உருவான இத்திட்டத்தை செயற்படுத்த ஹெம்மாதகம பிரதேசத்திலுள்ள சகல பாடசாலைகளினதும் அபிவிருத்திச் சங்கங்கள் முன்வந்துள்ளன.  

இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த 30.09.2022அன்று பள்ளிபோருவ முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது. அதிபரும் SDEC இன் தலைவருமான அஷஷெய்க் நிஸாம் தலைமையில் ஏனைய சிங்கள, முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், SDEC உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.  

உரையாடலை PMV உபஅதிபர் அஷ்ஷெய்க் பாரிஸ் ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அதிபர்கள், SDEC உறுப்பினர்கள் தமது ஆலோசனைகளை முனவைத்ததோடு இந்நிகழ்வை பூரணமாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பை நல்குவதாக உறுதியளித்தனர்.  

இக்கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழாவின் இலக்குகளாக கலாசார புரிந்துணர்வு, யதார்த்தபூர்வ நல்லிணக்கத்திற்கு வழிகோலல் போன்றன விளங்குகின்றன. சகல பாடசலைகளினதும் SDEC ஒன்றியம் ஒன்றை உருவாக்குதல், சிங்கள, முஸ்லிம் உறவில் புதிய திருப்பத்தை உருவாக்க பாடசாலையூடாக செயல்திட்டங்கள் உருவாக்கல், மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை தொடர்ச்சியாக எடுத்துச் செல்லல், ஆசிரியர்களிடையே நட்புணர்வை வளர்த்து கல்வி மற்றும் அது சார்ந்த செயல்பாட்டு திட்டங்களை பகிர்ந்து கொள்ளல் என பல செயல் திட்டங்களை அதிபர்களும் SDEC இனரும் முன்வைத்தனர்.  

இக்கலந்துரையாடலை எதிர்வரும் திங்கள் மாலை 6மணிக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வேலைப்பளு மற்றும் திடீர் ஏற்பாடு போன்ற காரணங்களால் கலந்து கொள்ள தவறிய சில அதிபர்கள் மற்றும் SDEC உறுப்பினர்கள் கலந்துரையாடவே இச்சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.  

 நியாஸ் ஸாலி  
இணைச் செயலாளர்,  
SDEC,  PMV  


Add new comment

Or log in with...