26 நிமிடங்கள் முன்னதாக நிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச் சந்தை

இன்றைய (03) கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை 26 நிமிடங்கள் முன்னதாகவே பி.ப. 12.04 மணிக்கு நிறைவடைந்தது.

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை பி.ப. 12.30 மணிக்கு நிறைவடைய வேண்டிய நிலையில், S&P SL20 சுட்டெண் முந்தைய நாள் புள்ளியிலிருந்து 5% இற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

S&P SL20 சுட்டெண் முந்தைய நாள் மட்டத்திலும் 5% இற்கும் குறைவடையும் நிலையில் இவ்வாறு பரிவர்த்தனைகள் இடைநிறுத்தப்படுவது வழக்கமாகும்.

இன்றைய நாளின் முடிவில் கொழும்பு பங்குச் சந்தை நிலவரம்,
ASPI (அனைத்து பங்கு விலைச் சுட்டெண்)
9,649.86
-281.21
-2.83%

S&P SL20
3,048.87
-116.46
-3.68%

மொத்த பங்குகளின் எண்ணிக்கை - 125,361,427
மொத்த புரள்வு - 2,536,580,401.80


Add new comment

Or log in with...