ஆட்டோ கட்டணத்தை குறைக்க முடியாது

முச்சக்கரவண்டி சங்கங்கள் அறிவிப்பு

ஆட்டோ  வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை முச்சக்கரவண்டி சங்கங்கள் வெளியிட்டுள்ளன.

இதன்படி, பெற்றோல் விலையை குறைத்தாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லைஎனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம்  (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைக்கப்பட்டது. இதன்படி, ஒக்டேன் 92பெற்றோல் லீட்டர்   ஒன்றின் விலை 40ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 410ரூபாவாகும்.

ஒக்டேன் 95 பெற்றோல் லீட்டர்  ஒன்றின் விலையும் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 510 ரூபாவாகும்.


Add new comment

Or log in with...