வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை

தங்கள் நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா நாட்டின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென் கொரியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட கொரியா தனது ஏவுகணையை கடலில் ஏவி சோதித்தது.

தனது 4 நாள் ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, தென் கொரியாவுக்கு கடந்த வியாழக்கிழமை வந்த கமலா ஹாரிஸ், அந்த நாட்டு ஜனாதிபதி யுூன் சுக்-யியோலைச் சந்தித்துப் பேசினார். மேலும், வட கொரியாவுடனான எல்லையில் அமைந்துள்ள இராணுவ விலக்கல் பகுதியில் அவர் உரையாற்றினார்.

அதற்கு முன்னதாக, அமெரிக்காவிலிருந்து கமலா ஹாரிஸ் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டபோதே வட கொரியா ஏவுகணை சோதனை செய்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. மேலும், அவர் ஜப்பானில் இருந்தபோது இரு ஏவுகணைகளை வட கொரியா புதன்கிழமை சோதித்தது.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பின் 3ஆவது முறையாக கடந்த வியாழக்கிழமை ஒரு ஏவுகணையை வீசி சோதித்ததாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தகவலை ஜப்பான் அதிகாரிகளும் உறுதி செய்தனர்.


Add new comment

Or log in with...