ஸ்வாட்டில் சட்டவிரோத குழுக்களின் நடமாட்டம்

வட மேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் சட்ட விரோதக் குழுவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்திற்கும் பாகிஸ்தான் தலிபான்களுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை ஸ்தம்பிதமடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

இம்மாகாணத்திலுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கின் மட்டா உட்பிரிவு மலைப் பிரதேசங்களில் தலிபான்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இது அண்டை மாவட்டங்களில் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளதோடு ஸ்வாட் பள்ளத்தாக்கின் சுற்றுலா துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...