ரொட்டரி கழகத்தின் கொல்ப் கிளசிக் போட்டி ஒக்டோபரில்

(படம்: சுதத் மலவீர)

றோயல் கொழும்பு கொல்ப் கழகம் மற்றும் டயலொக் என்டபிரைசஸ் உடன் இணைந்து கொழும்பு மாநகர ரொட்டரி கழகம் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும் நடத்தும் பார் 3 கொல்ப் கிளசிக் போட்டி வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இம்முறை இரு வெவ்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்ட ஒரு நாள் போட்டியாக நடைபெறவுள்ளது.

கொழும்பு மாநகர ரொட்டரி கழகத்தினால் மேற்கொள்ளப்படும் பல் சமூக அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி சேகரிக்கும் நோக்கிலேயே இந்த வருடாந்த கொல்ப் போட்டி நடத்தப்படுகிறது.

டயலொக் என்டபிரைசஸ் நிறுவனம் இந்த போட்டிகளுக்கு பிரதான அனுசரணை வழங்கும் நிலையில் சௌத் பீச் வெலிகம பிளாட்டினம் அனுசரணை வழங்குகிறது.


Add new comment

Or log in with...