மே 09 தீக்கிரை சம்பவங்கள்: தடுக்கத் தவறியதாக கூறி 23 OIC மாருக்கு இடமாற்றம்

பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவிப்பு

23 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமையிலிருந்து நீக்கப்பட்டு, வேறு சாதாரண பொலிஸ் கடமைகள் தொடர்பில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்தூவ கூறினார்.

பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த 23 பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், கடந்த மே மாதம் 09 ஆம் திகதியும் அதனை அண்மித்தும் நாட்டில் பதிவான வன்முறைகலின்போது, அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களை தடுக்கத் தவறியமையை மையப்படுத்தி இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

தமது கடமைகளை சரிவரச் செய்யாதமை தொடர்பில் இவர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி உயிலன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.ஜே.முத்தட்டுதென்ன களனி வலயத்தின் சாதாரண கடமைகளுக்காக இடமாற்றப்பட்டுள்ளார். அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எல்.எல். விஜேரத்ன குளியாபிட்டிய வலயத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...