இன்று முதல் சில தினங்களுக்கு தென்மேல் பகுதியில் மழை அதிகரிக்க வாய்ப்பு

- ஊவா, அம்பாறை, மட்டக்களப்பில் மாலையில் அல்லது இரவில் மழை

இன்று (30) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு, வடமத்திய, தென் மாகாணங்களிலும் காற்றானது மணித்தியாலத்துக்கு சுமார் 50 கி.மீ. வரையான வேகத்தில்  பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...