அச்சமின்றி திரிபோஷாவை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

Aflatoxin என்ற பதார்த்தம் அடங்கியுள்ள திரிபோஷா சத்துணவு அழிக்கப்பட்டுள்ளதால், அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா சத்துணவு தொடர்பில் எவ்வித சந்தேகமுமின்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியமென கர்ப்பிணித் தாய்மார் உள்ளிட்ட பெண்களுக்கு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

திரிபோஷா சத்துணவு தொடர்பில் தேவையற்ற அச்சத்தை தவிர்க்குமாறும் உண்மைக்கு புறம்பான தகவல்களே, இது தொடர்பில் வெளியிடப்படுவதாகவும் குடும்ப சுகாதார சேவை அலுவலகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Aflatoxin என்ற பதார்த்தம் அடங்கியிருப்பதாக பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்ட திரிபோஷா பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. எனவே, சிகிச்சை சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள திரிபோஷாவை பயன்படுத்த முடியுமென்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் திரிபோஷா நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட திரிபோஷாவில் Aflatoxin அளவு கூடுதலாக இருந்தமை ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு Aflatoxin இருந்ததாக உறுதி செய்யப்பட்ட திரிபோஷா தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மற்றும் திரிபோஷா நிறுவனம் உறுதி செய்துள்ளது.


Add new comment

Or log in with...