ஊவா, அம்பாறை, மட்டக்களப்பில் மாலையில் மழை

- நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (29) சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று, மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Add new comment

Or log in with...