அரச செலவில் வீட்டு தொலைபேசி பட்டியல் செலுத்தல்; கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு குற்றப்பத்திரம்

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (28) குற்றப்பத்திரம் கையளித்துள்ளது.

தமது தனிப்பாட்ட வீட்டின் தொலைபுசி பட்டியலை அரசாங்க பணத்தில் செலுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு ஊழல் மோசடி நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரத்தை கையளித்த கொழும்பு மேல் நீதிமன்றம், அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை நவம்பர் 03ஆம் திகதிக்குகு ஒத்திவைத்தது.

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட மாதாந்த தொலைபேசி கட்டணத்தை செலுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல 2012 ஆம் ஆண்டு மார்ச் 15 முதல் ஏப்ரல் 14 வரையான காலப்பகுதியில் வெகுஜன ஊடக அமைச்சராக இருந்த வேளையில், தனது வீட்டின் தொலைபேசி பட்டியல் தொகையான ரூ. 230,000 இனை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...