பின்னவல மிருக காட்சிச்சாலை 'இரவு சபாரி பூங்கா' ஆகிறது

சுற்றுலா பயணிகளை கவர அமைச்சு ஏற்பாடு 

பின்னவல மிருகக்காட்சிச்சாலைக்கு இரவு சபாரி பூங்கா என பெயரிட தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பின்னவல மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்கு மாலை 5மணி வரை மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றது.

இதனால் சுற்றுலா பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதோடு, வருமானமும் குறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த மிருகக் காட்சி சாலையை இரவு நேரமும் பார்வையிட காணப்படுகின்ற தடைகள் தொடர்பில் ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்ய அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இரவு நேரத்திலும் மிருகக்காட்சி சாலையை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கும் பட்சத்தில் 'இரவு சபாரி பூங்கா'  என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...