முட்டையின் விலையை குறைக்க நடவடிக்கை

முட்டை வர்த்தகர் சங்கம் தெரிவிக்கிறது

சந்தையில் கோழி முட்டையின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதன் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக முட்டை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழித்தீனுக்கான உற்பத்தி செலவுகள்படிப்படியாக குறைவடைந்து வரும் நிலையில் முட்டையின்  விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தின் செயலாளர் அனுரசிறி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தையில் தற்போது முட்டை ஒன்றின் விலை 50ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் முட்டை விலையில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் விசேட பேச்சு வார்த்தையொன்று நாளை 28 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...