மின்வெட்டு நேரத்தை மேலும்அதிகரிக்க மூன்று காரணங்கள்

- லக்‌ஷபான பழுது; டீசல் இல்லை; CEBயிடம் பணமில்லை

நிலைமையை விளக்குகிறார் அமைச்சர் கஞ்சன  

லக்க்ஷபான மின் உற்பத்தி நிலையம் பழுதடைந்துள்ளதாலும் டீசல் மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபையிடம் போதிய பணம் இல்லாததாலும், நீர் மின்சாரத்தை உரிய முறையில் முகாமைத்துவப்படுத்த முடியாததாலும் மின்வெட்டை நீடிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெயின் தரம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட ரீதியாக பதிலளிக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.  


Add new comment

Or log in with...