ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிவதற்கு கணக்கெடுப்பு

சுகாதார அமைச்சு விரைவில் நடவடிக்கை
 
ஊட்டச்சத்து பிரச்சினைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
அண்மையில் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பதிவாகிய சம்பவங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர், கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
 
உரிய கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் விரைவில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
 

Add new comment

Or log in with...