சாய்ந்தமருது பிரதேச செயலக அணி வெற்றி

சாய்ந்தமருது பிரதேச செயலக அணிக்கும் சஹிரியன் 90கள் அணிக்குமிடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் பிரதேச செயலக அணி வெற்றி பெற்றது. அணிக்கு 11 பேர் கொண்ட10 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி நேற்று (25) சாஹிராக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சஹிரியன் 90கள் அணி 10 ஓவர் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 82 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரதேச செயலக அணி 9.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

சவளக்கடை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...