துபாயிலிருந்து கட்டுநாயக்க வருகையில் 2 கோடி ரூபா தங்கத்துடன் சுங்கத்திடம் சிக்கிய நபர்

பெறுமதியான மேலும் சில பொருட்களும் சிக்கின

2கோடி ரூபா பெறுமதியான தங்கம் உள்ளிட்ட  மேலும் பொருட்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்துள்ள நபர் ஒருவர் நேற்று சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2கோடி ரூபா பெறுமதியான தங்கம், பாவித்த கையடக்க தொலைபேசிகள், மடிக்கணனிகள் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்க கட்டிகள் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களையே அவர் நாட்டுக்கு சட்ட விரோதமாக எடுத்து வந்துள்ளதாகவும் அதன் பெறுமதி 22.5மில்லியன் ரூபா என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி நபர் தமது தனிப்பட்ட பொருட்களைக் கொண்ட பையில் அதனை மறைத்து வைத்து சாதாரணமாக பொருட்களை கொண்டு வராதவர்கள் உபயோகிக்கும் பாதையின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்திலேயே சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் மற்றும் பொருட்களை அரச உடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக அவர்துபாயிலிருந்து ஓமானின் மஸ்கட் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...